நாம் எல்லோரும் கணணி உதவியிலான வரைதலுகு(CAD) Auto CAD மென்பொருளினேயே பயன்படுத்துவதுடன் அது மட்டுமே இலகுவானது என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அது சம்பந்தமான புதிய மென்பொருட்களினைத் தேடிக்கற்பதில் நாட்டமின்றியிருக்கின்றோம்.
ஆனால் இம் மென்பொருளைத் தவிர வேறு பல இவ்வகையான கணணி உதவியிலான குறிப்பிட்ட சில வைகயான வரைதலிற்கு மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. ஆயினும் அவற்றினை நாம் எமது சுயமுயற்சியில் இணையத்தள வீடியோக்களின் ஆதரவுடனேயே கற்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவற்றினைக் கற்பிக்கும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் இல்லை என்பதாலாகும்.
ஆனால் நீங்கள் மேற்க்கத்தைய நாடுகளிலோஅல்லது மத்தியகிழக்கு நாடுகளிலேயோ வேலைக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தால் மிக முக்கியமானதாகும்
- மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)
- பவர் சிவில் (Power Civil)
- பென்ரிலி மப் (Bentley Map)
- வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS)
- சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)
என்பன மிக முக்கியமானவை.
மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)
இது இருபரிமான முப்பரிமான கணனி உதவியிலான வரைதலுக்கு பெரும் உதவியளிப்பதுடன் இதன் இலகுவான பணனர் இடைமுகம், பல்வேறு வகையான கோப்புக்களினையும் பயன்படுத்தக் கூடிய தன்மை என்பவற்றுடன் மேலதிக பொறியியல் வடிவமைப்புக்களிற்காக வடிவமைப்பு மென்பொருள் தொகுதிகளில் பணன்படுத்தும் பொழுது எந்த வித மாற்றங்களினையும் மேற்கொள்ளாது தரவுக் கோப்புக்களினை பயன்படுத்தக் கூடிய தன்மையும் முக்கியமானதாகும்
பவர் சிவில் (Power Civil)
வீதி வடிமைப்பு மற்றும் தரைத்தோற்ற வடிவமைப்பு என்பவற்றிற்கு ஓர் மிகச் சிறந்த மென்பொருளாகும். ஏனெனில் பெரும்பாலான பொறியியல் பகுப்பாய்வுகளினை இதன் மூலம் நாம் மிக இலகுவாக செய்து கொள்ள முடிவதுடன் பல்வேறு பொறியியல் கணிப்புக்களினையும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்பது போன்ற நிலைமைகளினைச் சோதித்துப்பார்க்கும் வகையிலான பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவது சிறப்பம்சமாகும்.
மேலும் தரைத்தோற்ற அமைப்புக்களினை கணணியில் மாதிரியிடல் குறுக்கு வெட்டு மற்றும் நீள்வெட்டு வரைபுகளினை வரைதல், வெட்டியெடுக்கப்படும் மற்றும் நிரவும் அளவீடுகளினைகணிப்பிடுதல், சமவுயரக் கோடுகளினை வரைதல் போன்றன மற்றைய மென்பொருள்களில் கிடைக்காத சிறப்பம்சம் என்பதுடன் இது பல்வேறு வகையான தரவுத்தளங்களுடன் இணைப்பை மேற்கொள்ளும் வசதியுடனும் உள்ளதால் தரவுச் சேமிப்பும் இலகுவானதாகும்.
பென்ரிலி மப் (Bentley Map)
இது புவியியல் தகவல் தொகுதிக்கு முற்றுமுழுதான பயன்பாட்டினை வழங்குவதுடன் அது சம்பந்தமான பல்வேறு பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவதுடன் செய்மதிப் படங்களின் பகுப்பாய்வுகள் வரைபடம் தயாரித்தல் போன்றவற்றினையும் இலகுவாக மேற்கொள்ள வழியமைக்கின்றது.
வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS) / சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)
வாட்டர் ஜெம்ஸ் மற்றும் சுவர்ஜெம்ஸ் என்பன முறையே குடிநீர் வடிகாலமைப்பு மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொடர்பான வரைபுகளிற்கு மற்றும் திட்டமிடலுக்கு மிகவும் பயனுள்ளது. ஏனெனில் இவற்றினைக் கொண்டு நாம் திட்டமிடும் பொழுது அல்லது வடிவமைக்கும் பொழுது நாம் எந்தவிதக் கணிப்பீடுகளினையும் செய்யத் தேவையில்லாமல் இருக்கின்றது. தேவைப்படும் தரவுகளினை நாம் உள்ளீடு செய்யின் மென்பொருளானது எமக்கு அக்குழாய்களில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் வேகம் மற்றும் இதர பொறியியல் விபரங்களினைக் கணித்து எமக்கு வடிமைப்பில் தவறுகள் ஏற்படாதவாறும் வேகமாக வடிவமைப்பினை மேற்கொள்ளக் கூடிய வகையிலும் உதவுகின்றது
0 comments:
Post a Comment