Tuesday, January 5, 2016

ஒளிப்படக்கலை - ஒளிப்படக் கருவிகளின் வகைகள்

ஒளிப்படக்கருவிகள் (கமெரா) பொதுவாக அவற்றின் மீதான புகைப்படக் கலைஞனின் கையாள்கைக்கு வழிவிடும் தன்மைக்கு அமைவாக 03 பிரதான வகைகளாக வகுக்கப்படுகின்றன.

1. எண்மிய ஒற்றைவில்லை தெறிப்புப் புகைப்படக்கருவிகள் (டிஜிற்றல் சிங்கிள் லென்ஜ் ரிபிளெக்ரிங் கமெரா)  Digital Slr Camera

இந்த வகையான புகைப்படக் கருவிகளே அதி நவீன மிகவும் கலைத்திறன் மிக்க ஒளிப்படங்களை எடுக்க வல்லன ஏனெனில் இவற்றின் மீது கலைஞனின் கட்டுப்பாடுகள் மிகப்பரந்த அளவில் மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. 
மேலும் தேவைக்கும் சந்தர்பங்களிற்கும் ஏற்ப இவ்வகை புகைப்படக் கருவிகளின் வில்லைத் தொகுதியினை (Lens) மாற்றியமைக்கும் வசதியினையும் கொண்டுள்ளது.
அத்துடன் இவ்வகைப் புகைப்படக் கருவிகளின் ஒளிப்பட உணரிகள் (இமேஜ் சென்சர்கள்) மற்றைய வகை கமெராக்களினதை விட வலிமையானதாகக் காணப்படுகின்றன.
இவ்வகை் கமெராக்கள் சந்தைப் பெறுமதி அதிகமானவையாக இருப்பதுடன் அழகான ஒளிப்படங்ளை எடுத்துக்கொள்ள சிறந்த புகைப்படக்கலை அனுபவமும் ஆற்றலும் தேவைப்படுவனவும் ஆகும்.
EOS Rebel T5i  or the Nikon D5200

2. கச்சிதமான எண்மிய புகைப்படக் கருவிகள் (கொம்பக்ற் டிஜிற்றல் கமெரா) Compact Digital Cameras:

இவை நாம் எமது சாதாரண வாழ்க்கையில் பயன்படுத்தும் சட்டைப் பையினுள் உள்ளடங்கக் கூடிய கமெராக்கள் ஆகும். இவற்றின் வில்லைத் தொகுதிகளையோ அல்லது இவற்றின் இயக்கங்களையோ கலைஞனின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்ற முடியாது. அதாவது இவற்றின் உருப்பெருக்க வலிமை (3x / 5x) ஒளி உணர்திறன் போன்றன பெரமளவில் மாற்றப்பட முடியாவை ஆகும்.
எனினும் இவை பாவனைக்கு இலகுவானவை. சந்தையில் மலிவாக கிடைக்கக் கூடியவை.
Nikon CoolPix 6300 
  
3.திறன்படுத்தப்பட்ட கச்சிதமான எண்மியப்  புகைப்படக் கருவிகள் (அட்வான்ஸ்ட் கொம்பக்ற் கமெரா)  Advanced Compact cameras

இவ்வகை் கமெராக்கள் கொம்பக்ற் டிஜிட்டல் கமெராக்களை விட சற்று அதிகமாக ஒளிப்படக் கலைஞனின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணமாக ஒளிப்படக் கலைஞன் இவற்றின் ஒளி வெளிப்பாடு அமைப்புக்களில் (லைற் எக்ஸ்போஸர் செற்றிங்ஸ்) மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்கின்றன.
அத்துடன் இவற்றில் பகுதி தானியக்கத் தன்மையுள்ள ஒளித் துவார கட்டமைப்புக்கள் (செமி ஓட்டோ அப்பாச்சர்) மற்றும் பகுதி தானியக்கத் தன்மையுள்ள ஜன்னல் கட்டமைப்புக்கள் (செமி ஓட்டோ சட்டர்) காணப்படுகின்றன.

அத்துடன் பெரிய உருப்பெருக்க வலிமையுடன் காணப்படுவனவுமாகும். (24x / 40x)

இவற்றின் சந்தைப் பெறுமதி டி எஸ் எல் ஆர் கமெராக்களை விட குறைவாகவும் கொம்பக்ற் கமெராக்களை விட அதிகமாகவும் காணப்படுகின்றன.
Panasonic Lumix FZ200

1 comment:

  1. Casino site | Lucky Club Live Casino and VIP Bonuses
    › › Casino › Casino Lucky Club offers you all the fun of a traditional casino with tons of luckyclub.live live games including slots, table games, video poker and progressive jackpots.

    ReplyDelete