Tuesday, January 5, 2016

எவ்வாறு புவியைக் கண்காணிக்கின்றன?

செய்மதிகளில் பல வகையான செய்மதிகள் உள்ளன. பொதுவாக அவை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
  1. புவிநோக்கு செய்மதிகள்
  2. தொடர்பாடல் செய்மதிகள்.
  3. புவியியல் அமைவிடங்காட்டி செய்மதிகள் (ஜி.பி.எஸ்)

இவற்றில் புவிநோக்கு செய்மதிகளே புவிக்கு மிக அண்மையில் புவியைச் சுற்றி வருகின்றன. அண்ணளாவான 400 தொடக்கம் 900 கிலோமீற்றர் உயரத்தில் இவை புவியை வடக்கு தெற்கு திசையில் அமைந்துள்ள செய்மதி ஒழுக்கில் வலம் வருகின்றன. இதன் மூலம் இவை புவியின் மேற்பரப்பு முழுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இவை வடக்கு - தெற்காக சுற்றும் வேளையில் புவியானது கிழக்கு மேற்க்காக சுற்றுவதனால் இலகுவாக அமைகின்றது.

புவிநோக்கு செய்மதிகள் பல்வேறு தேவைகளுக்காகவும் விண்ணில் செலுத்தப்படலாம். உதாரணமாக
  1. வானிலை அவதானிப்பு (மொடிஸ் செய்மதி)
  2. தாவரவியல் ஆய்வு (லான்ட்சற் செய்மதிகள்)
  3. புவி மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பான ஆய்வுகளிற்கு (மொடிஸ்)
  4. இராணுவத் தேவைகளிற்கு  (மில்ஸ்ரார்)
என இதன் பயன்பாடுகள் தொடர்பான பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்லும். இவையெல்லாம் எவ்வாறு சாத்தியப்படுகின்றன?
அனைத்தும் மின்காந்த அலைகளினாலே சாத்தியமாக்கப்படுகின்றன. இவை தொடர்பாக விளக்கமாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

Related Posts:

  • மிதிவெடியகற்றல் முறைகள் இன்று உலகின்பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மனிதநேய கண்ணிவெடியகற்றும் தொண்டுநிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவையனைத்தும் தமது நிதி மற்றும் தொழில்நு… Read More
  • யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம் யாழ்ப்பாணமானது எந்தவித மேற்பரப்பு நன்னீர் ஆதாரங்களையும் கொண்டிராத ஓர்பகுதியியாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மழைநீர் தேங்கி நிற்கும் குட்டைகள் உ… Read More
  • களமுனைகளில் மிதிவெடிகளின் பயன்பாடு களமுனைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவது எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அல்ல. எதிரியின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காகவே களமுனைகளில் ம… Read More
  • மனிதநேய கண்ணிவெடியகற்றல் மனிதநேய  கண்ணிவெடியகற்றலானது இராணுவத் தேவைகள் எதுவுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் மிதிவெடி அகற்றப்படுவதனைக் கு… Read More
  • மனிதநேய கண்ணிவெடியகற்றலில் வெடிபொருள்களை வகைப்படுத்தல் தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிப்பதற்காகவும் பல்வேறு ஆய்வுகளிற்காகவும் மனிதெநேய வெடிபொருள் அகற்றல் துறையில் வெடிபொருள்களை வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்ப… Read More

0 comments:

Post a Comment