
இப்பொறிமுறையை நிறைவேற்ற அல்லது இவ்வாறான தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகள் வேறுபட்ட தொகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளன.
1. GPS - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
2. GLONASS - ரஸ்ஸியா
3. Galileo Navigation System - ஐரோப்பிய ஒன்றியம்
4. COMPASS - சீனக் குடியரசு
தற்பொழுதைய நிலையில் GPS மற்றும் GLONASS ஆகியவை முற்றுமுழுதான தொழிற்பாட்டில் உள்ளன. மற்றயவை இன்னும் சிறிது காலத்தில்தொழிற்படக்கூடிய நிலையில் உள்ளன.
இவ்வாறான நிலையில் பலரும் நினைப்பது GPS என்றால் செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் என்று அது தவறாகும். GPS ஆனது அத் தேவையைப் பூர்த்தி செய்யஅமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஓர் தொகுதியாகும்.
எனினும் GPS GLONSS உட்பட அனைத்தும் ஓர் பொதுவான தொழிற்பாட்டு முறையையே கொண்டுள்ளன. ஆனால் GPS இன் ஆவணத்தொகுப்பு அதிக எண்ணிக்கையான தொழிற்படு செய்மதிகள் GPS இன் பெயரை பிரபலப் படுத்தியதுடன் அமெரிக்காவின் GPS பாவனை மீதான கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதும் மேலுமொரு காரணம் ஆகியது.
எனினும் இன்று சந்தைகளில் மற்றும் இணைத்து பாவிக்கக் கூடிய கருவிகள் கிடைப்பதானது செய்மதி அடிப்படையியிலான வழிச்செலுத்தல் மற்றும் நிலையப்படுத்தலை இலகுவாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment