நகரத்திட்டமிடல் என்பது நிலைத்து நிற்கக் கூடியதும் சுபீட்சமானதுமான மனித வாழ்க்கைக்கான உச்ச நிலப்பாவனைக்குரய வகையிலான தூரநோக்குடன் அபிவருத்தியினை ஒழுங்கமைத்தல் என்று கொள்ளலாம். எனவே இங்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தகவல்கள் இடம் சார்ந்ததாகவே அமைகின்றன என்பது வெளிப்படையானதாகும்.
எமதுபொதுவான தரவுத்தளங்களில் பகுப்பாய்வு மென்பொருள்களில் இவற்றை பயன்படுத்த வேண்டுமாயின் இடம்சார் தரவுகளை கைவிட்டு பகுப்பாய்வு செய்ய வேண்டிய நிலைமை உருவாகும். இது ஏற்றுக் கொள்ளககூடியதல்ல. ஆகவே இவ்வாறான இடம்சார்பான தகவல்களினை பொதுவான தரவுத் தளங்களிலும் மென்பொருட்களிலும் சேமித்தல் பகுப்பாய்வு செய்தல் என்பது வினைத்திறன் குறைவானதாக அமையும் அல்லது பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்குரிய நம்பிக்கையான முடிவுகளினைத் தராது. அதற்காகவே நாம் இடம்சார் தரவுகளினைக் கையாள்வதற்கு ஓர் சிறப்பான பொறிமுறை தேவைப்படுகின்றது.
எனவே இச்சிக்கலினைக் கையாள்வதற்காகவே புவியியல் தகவல் முறைமையானது முக்கியத்துவம் பெறுகின்றது. புவியியல் தகவல் முறையில் எந்தவொரு தரவுகளுடனும் அதற்குரிய இடம் அடையாளப்படுத்தப் படுவதனால் பகுப்பாய்வாளர் அல்லது நகரத்திட்டமிடலாளர் பிரதேசத்திற்குரிய தரவு மாதிரியொன்றை ஏற்படுத்த முடிகின்றது. அத்துடன் பகுப்பாய்வின் முடிவுகளினை மீள அமுல்படுத்த முயலும் போதும் தெளிவாக இடத்தினை அறிந்து நிறைவேற்ற முடிகின்றது.
தரவு சேகரித்தல் பொறிமுறைகள் (Data Collection Mechanism)
எந்தவொரு சிறப்பான முடிவெடுத்தலுக்கும் பொருத்தமான தரவுகள் பொருத்தமான நேரத்தில் கிடைக்கப் பெறுதல் வேண்டும் அவ்வாறே நகரத்திட்டமிடலுக்கும் தரவு சேகரித்தல் என்பது முக்கியத்துவமானது. தற்போதைய காலத்தில் புவிமேற்பரப்புடன் தொடர்புற்று நிற்கக் கூடிய முறையில் தகவல் சேகரிப்பிற்கு பல்வேறு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.
1. செய்மதித் தரவுகள் (Satellite Data)
செய்மதி ஒளிப்படங்களானது புவி மேற்பரப்பின் நிலப்பாவனை மற்றும் தரைத்தோற்றம் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுகின்றது. உதாரணமாக நகரத்திட்டமிடலில் கடல் மட்டத்தில் இருந்தான நில உயர வேறுபாடுகளானது அந்நிலத்தின் பயன்பாட்டைத் திட்டமிடலில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை நாம் எமது மரபுசார் முறையான நில அளவையியல் மூலம் பெற்றுக்கொள்ளமுயலுமிடத்து பெரும் பொருள் செலவும் கால விரயமும் ஏற்படும். ஆனால் இவற்றை செய்மதி ஒளிப்படங்கள் மூலம் பெற்றுக் கொள்ளமுயலுமிடத்து மிகக் குறுகிய காலத்திலும் மிகக் குறைந்த செலவிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும். அத்துடன் இறுதியாக விண்வெளிக்கு ஏவப்பட்ட வர்த்தக செய்மதியான வேல்ட்வியூ 3 இன் உதவியுடன் நாம் 0.5 மீற்றர் துல்லியத்தன்மையுடைய உயர வேறுபாடுகளினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இச் செய்மதி ஒளிப்படங்கள் மூலம் தற்போதைய நிலப்பயன்பாடு மற்றும் அதன் மாற்றங்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் என்பவற்றை துல்லியமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் நம்பகத்தன்மையும் அதிகமாகும்.
2. இணைய அடிப்படையிலான தரவு சேகரித்தல் (Web Based Data Collection Methods)
வேகமாக மாறிவரும் இணைய அமைப்பிற்கேற்ப தகவல் சேகரிப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனiடிப்படையில் இணையம் சார் புவியியல் தகவல் வேகரிப்பு முறைமையானது முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணமாக சமூகம் சார் தகவல்களினைத் திரட்டும் பொழுது பொதுமக்கள் பங்களிப்புடன் தகவல் சேகரிப்பது இலகுவானது. அத்துடன் இம்முறையில் பல்வேறு பயனர் இடைமுகங்களினூடாக தரவுகளினை உறுதிப்படுத்தும் பொறிமுறைகளினையும் அமுல்படுத்தக் கூடியவாறாக அமைகின்றது. உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் Google Map , மற்றும் உள்ளுர் நிறுவனமான ஜியோ இனடபோமற்றிக்ஸ் உடைய Landgatelanka ஆகியன உதாரணங்களாக குறிப்பிடக்கூடியவையாகும்

3. புவியிடங்காட்டியுடன் கூடிய இலத்திரனியல் கருவிகள் (GPS Enabled Data Loggers)
இவ்வாறான உபகரணங்களின் உதவியுடன் நேரடியாகக் கள உத்தியோகத்தரினால் தகவல் சேகரிக்கப்படலாம். புவியிடங்காட்டி தெரிவின் போது அதன் துல்லியத் தன்மை கணக்கிலெடுக்கப்பட வேண்டியமை முக்கியத்துவமாகும் அத்துடன் தகவல் சேகரிப்பாளரின் வழுவாத் தன்மையும் முக்கியமமானதாகும்.

4. முப்பரிமாண மாதிரிகள் (3D Models)
இன்று சாதாரண புகைப்படங்களினைக் கொண்டு முப்பரிமாணக் காட்சிகளினை ஏற்படுத்தக் கூடிய மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடியது யுஉஉரவந 3D. இவ்வாறான மென்பொருள்களினுடாக தற்போதைய நகரத்து நிலையினை மாதிரியை அலுவலக கணனித்திரையில உருவாக்கி மிகத் தெளிவாக அலவலகத்தில் இருந்து கொண்டே முடிவெடுக்க உதவியாக இருக்கும்

எனினும் எவ்வாறான முறையில் தகவல் சேகரிப்பு என்பது முற்று முழுதாக திட்டமிடலாளரின் தேவையினைப் பொறுத்ததும் அவரிற்கு தேவையான துல்லியத் தன்மையின் அடிப்படையிலேயுமாகும். எனினும் பொதுவாகத் நகரத் திட்டமிடல் எனும் பொழுது 2- 5 மீற்றர் துல்லியத் தன்மை போதுமானது என்பது பொதுவான கருத்தாகும்.
தகவல் பகுப்பாய்வு (Data Analysis)
சேகரிக்கப்பட்ட தரவுகள் பொரு;தமான முடிவுகளினை மேற்கொள்ளத் தக்க வகையில் பகுப்பாய்வு செய்யப்படுதல் முக்கியமானதாகும். இதற்கு தற்காலத்தில் பல்வேறு வகையான மென்பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. இதற்கு வர்த்தக ரீதியான அல்லது திறந்த மூல மென்பொருள்கள் பாவிக்கப்படலாம். எனினும் இலங்கையின் பொருளாதார நிலமையில் வர்த்தக ரீதியான முழுமையான புவயியல் தகவல் முறைமை மென்பொருள்களினைக் கொள்வனவு செய்தல் என்பது சிக்கலான ஒன்றாகும் எனவே குறைந்த பெறுமதியிலான Mapinfo Bentley Map போன்ற மென்பொருள்களினையோ அல்லது திறந்தமூல மென்பொருள்களினையோ (Free and Open Source Software) பாவிக்க முடியும். எனினும் பொதுவான தரவு மேலாண்மைக்கு (Data Management) திறந்த மூல மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டினும் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறியியல் கணிப்புக்கள் உள்ளடங்கிய பகுப்பாய்வுகளிற்கு (Analysis) திறந்தமூல மென்பொருள்களின் நம்பிக்கைத் தன்மை சற்று தளம்பலாகவே காணப்படுகின்றது.
தரவு பகிர்வு (Data Sharing)
திட்டமிடல் அணியினிற்குள் தரவுப் பகிர்வு என்பது மிக முக்கியமானதாகும். இல்லையெனில் வேலைப் பகிர்வு குறித்த காலப்பகுதியினுள் குறிப்பிட்ட வேலையினை முடித்தல் என்பன சிரமமாக அமையும். இவ்வாறான சிக்கல்களினை தவிர்க்குமுகமாக இணையத்தள அடிப்படையில் இயங்கும் புவியியல் தரவுத்தளங்களை; அல்லது எமது தேவைக்கேற்ப கட்டமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்த திறந்த முல செயலிகளினைக் கொண்டு வடிவமைக்கப்ட்ட தரவுத்தளங்களைப் பாவிப்பதானது வினைத்திறனுடையதாக அமையும்.
தரவு தகவல் காட்சிப்படுத்தல் (Data Visualization)
எப்படிப்பட்ட வேலையானாலும் இறுதிக் காட்சிப்படுத்தலில் தான் அதன் நிறைவுத் தன்மை அடங்கியுள்ளது. அதிலும் நகரத் திட்டமிடல் போன்ற வடிவமைப்பு வேலைகளில் சிறப்பான காட்சிப்படுத்தல் இல்லையானல் எமது முடிவுகளினை வெளிப்படுத்தல் சிரமமானதாக அமையும். அதனால் முடிவுகளினை சிறப்பாக வெளிப்படுத்த வரைபடங்களினை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற நிலமை தற்பொழுது இல்லை. முப்பரிமாணக் காட்சிகள், இப்படியானால் எப்படியிருக்கும் என்ற பயனரின் கோரிக்கைக்கமைவான மாற்றங்களை வெளிப்படுத்தும் இருபரிமாண/ முப்பரிமாண வெளிப்பாடுகள் அல்லது அட்டவணைகள் அறிக்கைகள் என பல்வேறு விதங்களில் காட்சிப்படுத்தக் கூடியதாக மென்பொருள்கள் இன்று கிடைக்கப் பெறுகின்றன.
இவ்வாறு மாறிவரும் உலகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப நாமும் எமது திட்டமிடல் துறையில் மாற்றங்களினைக் கொண்டு சிறப்பான தூரநோக்குடைய நகரத்திட்டங்களினை தெளிவான பகுப்பாய்வுகளினை மேற்கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளினை எடுக்கக் கூடிய வகையில் ஏற்படுத்தப் போகின்றோமா? இல்லை பழமையான முறையில் நேரத்தினை விரயமாக்க கூடியவகையில் தொடரப்போகின்றோமா? என்பது எமது தொழில்நுட்ப தேடலிலே தங்கியுள்ளது
0 comments:
Post a Comment