Tuesday, January 5, 2016

கண்ணிவெடியகற்றலும் சூழல் மாசடைதலும்


பெரும்பாலான இராணுவ தளங்கள் மற்றும் முன்னரங்க நிலைகள் இயற்கையான பாதுகாப்பு உள்ள பிரதேசங்களான ஆறுகள் காடுகள் மற்றும் களப்புக்கள் மற்றும் கடற்கரையோரங்களை அண்டியே அமைந்துள்ளன. இவ் இராணுவ நிலைகளிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் புதைக்கப்படும் மிதிவெடிகள் மனிதர்களை மட்டுமின்றி பெருமளவு விலங்குகளையும் பாதிக்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மிதிவெடிகளில் பெரும்பாலானவை 05 கி.கி மேற்பட்ட நிறை அழுத்தம் கிடைத்ததும் வெடித்து விடுகின்றன. இதன் காரணமாக யானை, மாடு போன்ற விலங்குகள் பெருமளவு ஆபத்தை எதிர்நோக்குகின்றன.

மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறாக வன விலங்குகளிற்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதனால் மிதிவெடியகற்றல் முன்னெடுக்கப்படும் பொழுது இதனை விட பலமடங்கு சூழல் மாசடைதல் ஏற்படுகின்றது.

1. மனிதவலுவினுடனோ அல்லது இயந்திர வலுவினுடனோ மிதிவெடியகற்றும் பொழுது மதிவெடியுணர் கருவிகளின் பாவனைக்கு அல்லது மிதிவெடியகற்றல் இயந்திரங்களின் பாவனைக்காக தாவரங்கள் பெருமளவு வெட்டியகற்றப்படுகின்றன. இதன்காரணமாக இயற்கையான சூழலில் பெருமளவு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. 

2. பெரும்பாலான வேளைகளில் இவ்வாறு வெட்டியகற்றப்படும் தாவரங்கள் இயந்திரங்களயோ அல்லது மிதிவெடியகற்றுனர்களோ தேவைக்கேற்றவாறு நகர்வதை தடுப்பதன்காரணமாக தீவைத்து அழிக்கப்படுகின்றன். இவ்வாறு தீ வைப்பதன் காரணமாக புகை மற்றும் வெப்பம் காரணமாக பல்வேறுவிதமான மாசடைதல்கள் ஏற்படுகின்றன.


3. மனித வலுவினுடான மிதிவெடியகற்றலின் போது சிலசமயங்களில் புவி மேற்பரப்பு 15 தொடக்கம் 30 செ.மீற்றர் ஆழத்திற்கு கிழறப்படுகின்றது. இதன்காரணமாக மண்ணின் கட்டமைப்பு மாற்றமடைவதுடன் பல்வேறு சிறு பூச்சி புழுக்களின் வாழ்விடம் அழிக்கப்படுகின்றது அல்லது குழப்பமடைய வைக்கப்படுகின்றது.

4. மிதிவெடியகற்றுனர்கள் மற்றும் இயந்திரங்களின் இரைச்சல் அப்பிரதேசத்தில் வாழும் விலங்கினங்களை பெருமளவு குழப்பத்திற்கு உள்ளாக்குவதுடன் அவற்றின் உணர்திறனிலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது


இவையெல்லாவற்றிற்கும் மேலாக மிதிவெடிகள் அகற்றபப்ட்ட பின்னர் மிதிவெடி ஆபத்துக்கள் இல்லையென்ற பாதுகாப்பு உத்தரவாதம் கிடைப்பதனால் பெருமளவு சட்டவிரோத அல்லது சட்ட ஆதரவினுடான இயற்கை அழிப்புக்கள் அதிகரிக்கின்றது. இதுவே எல்லாவற்றையும் விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது....

0 comments:

Post a Comment