புவியியல் இடங்குறிப்பு தொழில் நுட்பமாயினும் சரி செய்மதித்
தொழில்நுட்பமாயினும் சரி அவை இராணுவ நோக்கங்களிற்காகவே ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டவையாகும். எனவே அவை அதிகப்படியான இராணுவப் பாவனையைக் கொண்டமைந்தவையாக உள்ள போதும் அவற்றின் சிவில் பாவனையும் அதிகமானவை.
தொழில்நுட்பமாயினும் சரி அவை இராணுவ நோக்கங்களிற்காகவே ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டவையாகும். எனவே அவை அதிகப்படியான இராணுவப் பாவனையைக் கொண்டமைந்தவையாக உள்ள போதும் அவற்றின் சிவில் பாவனையும் அதிகமானவை.
இராணுவ பயன்பாடுகளில் முக்கியமான சில:
1.
இராணுவமானது எந்தப்பகுதியிலும் எந்த நேரத்திலும் வினைத்திறனுடன் இயங்க வேண்டுமாயின் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய பாதை அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய பாதை என்பவற்றை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அதாவது பாதைகள் அடங்கிய வரைபடம் மற்றும் அதில் தாங்கள் நிற்கும் நிலையத்தை விரைவாகவும் துல்லியமாகவும் அறிந்திடும் வசதியும் மிக முக்கியமானது. அதனடிப்படையில் புவியியல் இடங்குறிப்புத் தொழில்நுட்பமும் டிஜிற்றல் வரைபடங்களும் இதனை மிக இலகுவாக்குகின்றன.
2.
எதிரியின் நகர்வுப் பகுதியினை அல்லது தமது நகர்வுப் பகுதியினை தமது தலைமைத்துவத்திற்கு அறிவிக்க வேண்டுமாயின் அங்கு இருக்கும் புவியியல் அடையாளங்களினை அல்லது பிரசித்தி பெற்ற கட்டடங்களை அடிப்படையாக வைத்து தகவல் பரிமாறல் என்பது திட்டமிடல்களிற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் கடினமானதாக அமையும். அவ்வாறான நிலையில் இலகுவாக இடங்களைக் குறிக்கவும் அவற்றினைத் தலைமையுடனோ அல்லது பொறுப்பதிகாரிகளினுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
3.
இராணுவ நோக்கில் ஏவுகணைகளினையோ இல்லை மோட்டார் எறிகணைகளையோ வீச வேண்டும் எனில் தனது நிலைக்கும் எதிரியின் நிலைக்கும் இடையிலான நேர்கோட்டுத் தூரம் (இடப்பெயர்ச்சி) அறிதல் மிக அவசியமாகும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வீதியின் அடிப்படையிலான தூரம் இதற்குப் பயன்படாது. ஏனெனில் எமது எறிகணைகள் வீதியினால் பயணிப்பவை அல்ல. ஆகவே அவற்றினைக் கணிக்க இடங்குறிப்புத் தொழில்நுட்பமும் புவியியல் தகவல் தொழில்நுட்ப முறைமையும்மிக அவசியமாகின்றது.
4. இராணுவ புலனாய்வின் போது சில வெற்றுக் கண்ணுக்கு புலப்படா தகவல்கள், உருமறைப்பு செய்யப்பட்ட தகவல்கள் என்பனவும் மிக முக்கியமானவையாகும். உதாரணமாக ஆட்டிலறித் தளங்கள் கவசவாகனங்கள் என்பன வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத வகையில் சண்டைக் களத்தில் உருமறைப்புச் செய்யப்பட்டிருக்கும். அவற்றினை அவதானிப்பது என்பது சண்டையின் போக்கினை மாற்றக்கூடிய முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமானதாகும். இன்றைய செய்மதித் தொழில்நுட்பமானது இவற்றினை அவதானிப்பதினை மிக இலகுவாக்குகின்றது. எப்படியெனில் பொதுவான இராணுவ செய்மதிகள் பொருட்கள் வெளிவிடும் வெப்ப அலைகளைப் பதிவிட கூடிய தொழில்நுட்பங்களினைக் கொண்டுள்ளது. அதன்படி வழமைக்கு மாறான வெப்பநிலை மாற்றம் காணப்படின் அது எதிரியின் ரகசிய நடவடிக்கைக் குரிய ஓர் இடம் என்பது தெளிவாகும். உதாரணமாக தாவர இலைகுழைகளால் உருமறைக்கபட்ட ராங்கியொன்று வெளி பார்வைக்கு தாவரம் மாதிரித் தெரிந்தாலும் அதன் வெப்பநிலையானது தாவர வெபடபநிலையை விட அதிகமாகும். ஆகவே தகவல் பகுப்பாய்வாளருக்கு தெளிவாக விளங்கும் அது தாவரமில்லை என்பது. அத்துடன் அது நகர்கின்றதா என்பதினை அடுத்த செய்மதிப்படத்துடன் ஒத்துப் பார்தால் அது ராங்கியா இல்லையா என்பதும் புரிந்துவிடும். இவ்வாறு தான் இன்றைய போர்க்களங்களில் எதிரியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
தொடரும்
தொடரும்
0 comments:
Post a Comment