இன்று உலகின்பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மனிதநேய கண்ணிவெடியகற்றும் தொண்டுநிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவையனைத்தும் தமது நிதி மற்றும் தொழில்நுட்ப நிலமைகளிற்கு அமைவாக வேறுபட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.
இவற்றில் பொதுவாக பலநிறுவனங்களும் பயன்படுத்தும் கண்ணிவெடியகற்றும் முறைகளாக,
01. மனிதவலுவிலான தொழில்நுட்பம் (Manual Demining Method):
![]() |
மதிவெடி அகற்றுனர் கிழறி ஒன்றின் மூலம் மதிவெடியகற்றல |
![]() |
மதிவெடி அகற்றுனர் உலோகவுணர்
கருவியொன்றின் மூலம்
மதிவெடியகற்றல்
|
02. மதிவெடி அடையாளப்படுத்தும் நாய் (Mines Detection Dog): நாய்களின் மோப்ப சக்தியின் உதவியுடன் இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட நாய்களைக் கொண்டு மதிவெடிகளை அகற்றும் முறையாகும்.
03. இயந்திர பயன்பாட்டு முறை (Mechanical Deming) :
இம்முறையில் தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் புவி மேற்பரப்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் மிதிவெடிகளை வெடிக்கவைக்கும் முறையாகும். இம்முறை வாகன எதிர்ப்புக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிப்பிரதேசங்களில் பயன்படுத்த முடியாத ஒன்றாகும். அத்துடன் இதன் மூலமாக 100 சதவீத உத்தரவாதத்தை வழங்க முடியாதும் முக்கியமானதாகும் பொதுவாக இம்முறை கண்ணிவெடி மற்றைய முறைகளால் அகற்றப்பட்ட பின்னர் அதனை உறுதிப்படுத்துவதற்கே (Verification) பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
![]() |
மிதிவெடியகற்றும் இயந்திரம் |
0 comments:
Post a Comment