Tuesday, January 5, 2016

மிதிவெடியகற்றலும் புவியியல் தகவல் தொழில்நுட்பமும்

மிதிவெடியகற்றல் என்பது நேரடியாக புவிமேற்பரப்பின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகின்றது. இதன்பொழுது கண்ணிவெடியகற்றப்படும் இடங்களில் பல்வேறு அடையாளங்கள் இடப்படுவது அவசியமாகின்றது. உதாரணமாக ஆபத்துப் பிரதேசங்களை அடையாளப்படுத்தல், மிதிவெடி அகற்றப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தல், மேலதிக ஆய்வுகளிற்காகவும்  மிதிவெடிப்பிரதேச எதிர்வு கூறல்களிற்காகவும் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தல் என இத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
புவி மேற்பரப்பில் பொளதீக அடையாளங்களைக் கொண்டு அடையாளப்படுத்ப்படினும் அவற்றின் நிலைத்திருக்கும் காலம் என்பது கேள்விக்குறியானது. ஏனெனில் மிதிவெடியகற்றல் என்பது ஒரு சில மாதங்களிலோ வருடங்களிலோ முடிந்து விடும் ஒரு செயற்பாடல்ல. எனவே தான் இங்கு வரைபடங்களும் அளவுத்திட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் மிதிவெடியகற்றலில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மட்டும் பங்கு பற்றுவதில்லை பல அரச அரசசார்பற்ற அமைப்புக்கள் பொதுமக்கள் என இதன் பங்காளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இதனால் இங்கு மிகப்பெருமளவிலான தகவல்கள் குறிப்பிட்ட புவியியல் நிலைகளுடன் இணைத்துப் பரிமாறப்படவேண்டியுள்ளது. எனவே ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் புவியியல் தகவல் தொழில்நுட்பமும் இவ்விடத்தில் முக்கியம் பெறுகின்றன.

பொதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் GICHD (Geneva International Centre for Humanitarian Demining) இனால் வடிவமைக்கப்பட்ட IMSMA (Information Management System for Mine Action) எனப்படும் பயனர் தரவு மையம் பயன்படுத்தப்படுகின்றது.  இந்த பயனர் இடைமுகமானது பின்னணியில் ESRI இனுடைய Arc Engine இனைப் பயன்படுத்தி MySQL தரவுமையத்தின் உதவியுடன் தகவல்களைச் சேமிக்கவும் பங்காளிகளிற்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் பயன் படுகின்றது.

எனினும் இந்த தரவுமையமானது நிறுவனங்களிற்கு தங்களினுடைய உள்ளகத் தேவைகளை நிறைவேற்ற கடினமாக அமைவதால் அவை பெரும்பாலும் ESRI இனுடைய Arc Map இனையே பெரும்பாலும் சார்ந்து இருக்கின்றார்கள்.

மேலதிக தகவல்களிற்கு  IMSMA

0 comments:

Post a Comment